பெய்ஜிங், மார்ச் 27 – சீனா சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இருதரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் ஆலோசனை நடத்தினார்.
இலங்கை அதிபராக பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக சீனா சென்றுள்ள சிறிசேனா, விவசாயம், சுகாதாரம், அறிவியல் மனிதவள மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சீனாவின் ஒத்துழைப்பை கோரினார்.
மேலும் இந்திய பெருங்கடலில் கடல்வழி வர்த்தகப் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாகவும் சீனா – இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளின் முத்தரப்பு உறவு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹம்பன்தோட்டா துறைமுகப் பணிகளுக்காக சீனா அளித்த உதவிகளுக்கு அந்நாட்டு அதிபருக்கு , சிறிசேனா நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுபோன்ற மிகப்பெரிய திட்டங்கள் தொடர்பாக சீனாவுடன் மேற்கொள்ள உள்ள ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் இலங்கை ஒத்துழைக்கும் என்றும் சிறிசேனா தெரிவித்துள்ளார்.