பப்புவா நியூகுனியா, மார்ச் 30 – பப்புவா நியூகுனியா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. உயிர்ச் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இது குறித்து பப்புவ நியூகுனியா தேசிய பேரிடர் மைய இயக்குனர் மார்டின்மோஸ் கூறியபோது, “அரை மீட்டர் அளவுக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் ரபௌல் கடற்கரை துறைமுகத்தில் எழுந்தன. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், 40 மைல் ஆழத்தில் கொகோபோ நகருக்கு 30 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது “என்றார்.
சேத மதிப்பு குறித்த தகவல் உடனே வெளியாகவில்லை இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூ குனியாவியைச் சுற்றி 1000 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்படலாம் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது.