Home நாடு பக்காத்தான் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியாது – ஹாடி கருத்து

பக்காத்தான் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியாது – ஹாடி கருத்து

622
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர், மார்ச் 30 – ஹூடுட் சட்டதிருத்தத்தை கொண்டு வருவதில் பாஸ் கட்சி முனைப்பு காட்டுவதால், பக்காத்தானின் மற்ற கூட்டணிக் கட்சிகளான ஜசெக-வும், பிகேஆரும் பாஸ் மீது அதிருப்தியில் உள்ளன.

பாஸ் கட்சி பக்காத்தானின் கொள்கைக்கு முரணாக செயல்படுவதாக மற்ற கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடம் பக்காத்தானின் எதிர்காலம் என்னவென்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு, “பக்காத்தான் எதிர்காலம் பற்றி எனக்குத் தெரியாது” என்று ஹாடி மேம்போக்காக பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஹாடிக்கு எதிராக கூறப்படும் கருத்துகளால், ஜூன் மாதம் நடைபெறவுள்ள பாஸ் கட்சித் தேர்தலில் அவர் தனது பதவியை தக்க வைப்பதில் பாதகம் ஏற்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள ஹாடி, “பாஸ்  உறுப்பினர்களை யாராலும் திசை  திருப்ப  முடியாது” என்று கூறியுள்ளார்.