Home நாடு தேச நிந்தனை குற்றச்சாட்டில் ‘தி எட்ஜ்’ பதிப்பாளர், ‘தி மலேசியன் இன்சைடர்’ தலைமை நிர்வாகி கைது!

தேச நிந்தனை குற்றச்சாட்டில் ‘தி எட்ஜ்’ பதிப்பாளர், ‘தி மலேசியன் இன்சைடர்’ தலைமை நிர்வாகி கைது!

778
0
SHARE
Ad

The-Edge-Malaysiaகோலாலம்பூர், மார்ச் 31 – கடந்த வாரம் ஹூடுட் பற்றிய தவறான செய்தி வெளியிட்டதாகக் கூறி நேற்று ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் மூவரை காவல்துறை கைது செய்ததைத் தொடர்ந்து, இன்று அதே காரணத்திற்காக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேச நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் தலைமை நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் ‘தி எட்ஜ்’ செய்தி நிறுவனத்தின் பதிப்பாளர் ஹோ கை தட் ஆகிய இருவரையும் இன்று காலை 11 மணியளவில் காவல்துறை கைது செய்து, டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டதை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice