Home கலை உலகம் அனுஷ்கா நடித்த ’ருத்ரமாதேவி’ படத்திற்காக லண்டன் சென்றார் இளையராஜா!

அனுஷ்கா நடித்த ’ருத்ரமாதேவி’ படத்திற்காக லண்டன் சென்றார் இளையராஜா!

878
0
SHARE
Ad

anuskha-ilayarajaஅனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு உருவாகி வரும் படம் ருத்ரமாதேவி. ஆந்திர மாநிலத்தின் பெரும் பகுதியை கி.பி. 1259 முதல் 1289 வரை ஆட்சி செய்த வீராங்கணை ராணி ருத்ரமாதேவி. இவர் படைகளை திரட்டி எதிரிகளுடன் போரிட்டு வீழ்த்தி வெற்றி கண்டவர்.

இப்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ருத்ரமாதேவி வாழ்க்கையை இயக்குநர் குணசேகர் படமாக்குகிறார். இதில் ராணி ருத்ரமாதேவி வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். மற்றும் அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

anuskha-ilayaraja34குணசேகருடன் இணைந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் தொடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

anuskha-ilayaraja90சரித்திரப் படம் என்பதால் இப்படத்தின் காட்சிகளுக்கும், இசைக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக இளையராஜா லண்டனுக்குப் புறப்பட்டு சென்றிருக்கிறார். அங்கு இரண்டு வாரங்கள் தங்கி படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்.