Home நாடு ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்தது – பார்த்தவர் தகவல்

ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்தது – பார்த்தவர் தகவல்

403
0
SHARE
Ad

செமினி, ஏப்ரல் 4 – ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ  ஜமாலுடின் ஜார்ஜிஸ் உட்பட 6 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்தை நேரில் கண்டவர், அது நடுவானில் வெடித்து சிதறியதாக தகவல் அளித்துள்ளார்.

unnamed

(விபத்து நடந்த பகுதியை குடியிருப்பு வாசி ஒருவர் படம் பிடித்து நட்பு ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்)

#TamilSchoolmychoice

ரோஸ்லான் ஹாருன் (வயது 54) என்ற பாதுகாவலர் ஒருவர் இது குறித்து பெர்னாமா செய்தியாளர்களிடம் கூறியுள்ள தகவலில், “ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியது. நிலத்தில் இருந்து அதிக உயரம் இல்லை. ஹெலிக்காப்டரின் வால், இறக்கை மற்றும் சிதறிய பாகங்கள் மேலிருந்து நிலத்தில் விழுந்தன” என்று தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த பகுதிக்கு தான் சென்று ஏதாவது உதவி செய்யலாம் என்று நினைத்ததாகவும், பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

விபத்து நடந்த பகுதி செமினியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், கம்போங் சுங்கை என்னும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.