Home நிகழ்வுகள் ‘ஓர் அகதியின் டைரி’ நூல் வெளியீடு

‘ஓர் அகதியின் டைரி’ நூல் வெளியீடு

1097
0
SHARE
Ad

booksகோலாலம்பூர், மார்ச்.4- இலங்கை போர் சூழலில் பிறந்து வளர்ந்து சொந்த மண்ணில் அகதியாய் வழ்ந்து பாதிப்படைந்து தற்போது மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஓர் அகதியின் அனுபவமே ‘ஓர் அகதியின் டைரி’.

இந்த நூல் மலேசியாவின் சமூக ஆர்வலர் ஈஸ்வர லிஙம் முயற்சியில் மிக விரைவில் தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படும்.

அழகிய வண்ணத்தில் 256 பக்கங்கள் அடங்கிய இந்த நூலை, குமாரி  கீதைபிரியா எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த நூல் தமிழ் ஈழ வளர்ச்சி மன்றத்தினால் வெளியிடப்படுகிறது என்று அதன் நடவடிக்கை இயக்குநர்  ஈஸ்வரலிங்கம் தெரிவித்தார்.

நம் நாட்டின் பல எழுத்தாளர்கள், நூல் ஆசிரியர்களின் படைப்புகளுக்குப் பெரும் ஆதரவு தரும் நம் நாட்டின் அமைச்சர்கள், தலைவர்கள், அரசுசார அமைப்புகள், தொழிலதிபர்கள், பொதுமக்கள்  இந்த தமிழ் ஈழ ஏழை அகதியான கீதைபிரியாவின் நூல் வெளியீட்டுக்கும் ஆதரவு தருவார்கள் என்று தாம் எதிர்ப்பார்பதாக ஈஸ்வரலிங்கம் கூறினார்.

மேல் விவரங்களுக்கு, 016-6880455 என்ற எண்ணுக்கு தொடர்புக் கொள்ளலாம்.