Home நாடு தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்த 17 பேர் கைது – காலிட் தகவல்

தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்த 17 பேர் கைது – காலிட் தகவல்

489
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர், ஏப்ரல் 6 – மலேசியாவில் தீவிரவாத செயல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 17 சந்தேகத்திற்குரிய போராளிகளை காவல்துறை நேற்று கைது செய்துள்ளது.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புக்கிட் அமான் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்துள்ளது. அதில் இருவர் சிரியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

“நான் ஏற்கனவே அறிவித்திருந்ததைப் போல், எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் மலேசியாவை ஒரு போக்குவரத்து இடமாகவோ அல்லது பதுங்கிக் கொள்ளும் இடமாகவோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். சிறப்பாகப் பணியாற்றிய தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கு எனது வாழ்த்துகள்” என்று காலிட் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice