Home உலகம் வங்கதேசத்தில் பேருந்து மரத்தில் மோதி 24 பேர் பலி – 22 பேர் காயம்!

வங்கதேசத்தில் பேருந்து மரத்தில் மோதி 24 பேர் பலி – 22 பேர் காயம்!

642
0
SHARE
Ad

tangail-road-accident-wbடாக்கா, ஏப்ரல் 9 – வங்கதேசத்தில் இன்று அதிகாலை பேருந்து மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். அம்மாநிலத்தின் தலைநகர் டாக்காவிலிருந்து நேற்று நள்ளிரவில், பரிசால் தெற்கு மாவட்டத்திற்கு அப்பேருந்து சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை பரித்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பாங்கா பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

#TamilSchoolmychoice

இதில் சம்பவ இடத்திலேயே 24 பேர் பலியானதாகவும், 22 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த 22 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.