Home நாடு பினாங்கு, பட்டர்வொர்த் இடையிலான கேபிள்கார் திட்டம் 2018-ல் நிறைவு!

பினாங்கு, பட்டர்வொர்த் இடையிலான கேபிள்கார் திட்டம் 2018-ல் நிறைவு!

608
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 16 – பினாங்கு தீவு மற்றும் பட்டர்வொர்த் இடையே கம்பி வட வாகன (கேபிள் கார்) சேவையை அளிக்க உள்ள ‘பினாங்கு ஸ்கை கேப்’ (Penang Sky Cab) திட்டம் வரும் 2018- ல் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

penang-sky-cab2

மாநில அரசு மற்றும் பினாங்கு சென்ட்ரல் முயற்சியில் இத்திட்டம் உருவாக்கம் பெற்றதாக அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆகாய மார்க்கமாக பினாங்கு தீவையும், பட்டர்வொர்த்தையும் இணைப்பதால்  இருபகுதிகளுக்கும் இடையேயான வாகனப் போக்குவரத்து குறையும். பயணம் மேற்கொள்ள இன்னொரு வழி கிடைக்கிறது. மேலும் சுலபமான, வேகமாக, வசதியான  போக்குவரத்தாகவும் இது அமையும்.”

“சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த கேபிள் காரில் ஒரு வழித்தடத்தில் பயணம் செய்ய 15 நிமிடங்கள் ஆகும். ஒரு வழித்தடத்தில், ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும்.”

“இந்த வசதி நடைமுறைக்கு வந்த பின்னர் வாடகை வண்டி (டேக்ஸி), பேருந்து, ரயில், படகு (ஃபெர்ரி) மற்றும் கேபிள் கார் என ஐந்து விதமான போக்குவரத்து வசதிகள் கொண்ட மையமாக பினாங்கு சென்ட்ரல் மாறும்,” என்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் லிம் குவான் எங் மேலும் கூறினார்.