Home இந்தியா ஐபிஎல்-8: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல்-8: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

465
0
SHARE
Ad

pti4_21_2015_000207b_0அகமதாபாத், ஏப்ரல் 22 – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

192 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன்  களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது.

#TamilSchoolmychoice

இதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்தது. பின்னர் 16 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 0.3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்கள் எடுத்தது. எனவே சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.