Home நாடு இந்திய சினிமா ஒலி ஒளி கண்காட்சி: ரோஸ்மா துவக்கி வைத்தார்!

இந்திய சினிமா ஒலி ஒளி கண்காட்சி: ரோஸ்மா துவக்கி வைத்தார்!

670
0
SHARE
Ad

IMAG2406 கோலாலம்பூர், ஏப்ரல் 25 – கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாட்டில், முதன் முறையாக ‘இந்தியப் பெருவிழா’ என்ற நிகழ்ச்சியின் துவக்க விழா இன்று  மலாயாப் பல்கலைக்கழகத்திலுள்ள கலைக்கூடம் வேந்தர் கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு, மாண்புமிகு டத்தின் படுகா ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் தலைமை வகித்து, கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

IMAG2476

#TamilSchoolmychoice

ரோஸ்மாவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்த மலேசியாவிற்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த படைப்புகளை ஒவ்வொன்றாக காட்டி அவருக்கு விளக்கமளித்தார்.

இந்த கண்காட்சியில், இந்திய சினிமாவின் வளர்ச்சி பற்றிய திரைப்பட பதாகைகள், விளம்பர பொருட்கள், கலைப்பொருட்கள்/பிரதி, ஊடாடும் பல்லூடகம் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

-ஃபீனிக்ஸ்தாசன்

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…