காட்மாண்டு, ஏப்ரல் 25 – நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 250 ஆண்டுகளுக்கும் மேலான தர்காரா கோபுரம் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் கட்டிடங்கள் பல விழுந்து நொறுங்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில், காட்மாண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.