Home நாடு இங்கிலாந்து பிரதமராக மீண்டும் டேவிட் கேமரூன்!

இங்கிலாந்து பிரதமராக மீண்டும் டேவிட் கேமரூன்!

728
0
SHARE
Ad

david-cameலண்டன், மே 9 – பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், டேவிட் கேமரூன் மீண்டும் இங்கிலாந்து பிரதமராகிறார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தமுள்ள 650 தொகுதிகளில், கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 331 இடங்களையும், மிலிபாண்ட்டின் தொழிலாளர் கட்சி 232 இடங்களையும் இதர தொகுதிகளை நிகோலா ஸ்டர்ஜியன் தலைமையிலான ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் பீட்டர் ராபின்சன் தலைமையிலான டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சியும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

milibandhqபெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கேமரூன், “கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இன்றைய நாள், மகத்தான நாள். இன்று இரவு மிகப் பெரும் கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதே போல் தோல்வியை ஒப்புக்கொண்ட எடி மிலிபாண்ட், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், வருத்தத்தை தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், தேர்தல் தோல்வி காரணமாக கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவார் என்றும் கூறப்படுகிறது.