Home நாடு மலேசிய, தாய்லாந்து கடல் எல்லையில் 1400 பேர் மீட்பு!

மலேசிய, தாய்லாந்து கடல் எல்லையில் 1400 பேர் மீட்பு!

646
0
SHARE
Ad

ROHINGYA4354eகோலாலம்பூர், மே 12 – 4 படகுகளில் வந்த 1400 ரோகின்யா குடியேறிகள் மலேசிய, தாய்லாந்து கடல் எல்லைப் பகுதியில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே போல் அச்சே பகுதியைச் சேர்ந்த 600 பேர் இரு தினங்களுக்கு முன்னர்
மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காளதேசம் மற்றும் மியன்மரைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் லங்காவி தீவுக்கு அருகே மனிதக் கடத்தல்காரர்களால் இறக்கிவிடப்பட்டிருந்த நிலையில், மலேசிய போலிசார் அவர்களை மீட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

“மூன்று படகுகளில் மொத்தம் 1018 பேர் வந்ததாகக் கருதுகிறோம். எனினும் இத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மேலும் சிலர் மீட்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கருதுகிறோம்,” என்று லங்காவி காவல்துறை துணைத் தலைவர் ஜமில் அகமட் தெரிவித்தார்.

தெற்கு தாய்லாந்து பகுதியில் இருந்து ஏராளமான ரோகின்யா தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில் சட்ட விரோதமாக குடியேறும் அம்மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.