Home இந்தியா ஐ.பி.எல்-8 : கொல்கத்தாவை 5 ரன்னில் வீழ்த்தியது மும்பை அணி!

ஐ.பி.எல்-8 : கொல்கத்தாவை 5 ரன்னில் வீழ்த்தியது மும்பை அணி!

532
0
SHARE
Ad

rohit-bcci_mமும்பை, மே 15 – ஐ.பி.எல்-8 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்து 5 ரன்னில் தோல்வியுற்றது.