Home உலகம் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்தில் இந்தோனேஷிய தூதர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்தில் இந்தோனேஷிய தூதர் உயிரிழப்பு!

496
0
SHARE
Ad

Indonesian-Ambassador-to-Pakistan-caught-dead-in-helicopterஜகார்த்தா, மே 20 – பாகிஸ்தானில் கடந்த 8–ஆம் தேதி 6 பாகிஸ்தானியர்கள் மற்றும் 11 வெளிநாட்டு தூதர்களுடன் சென்ற எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஒன்று நால்டர் பள்ளத்தாக்கு பகுதியில் சென்றபோது திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு, பள்ளிக்கட்டிடம் மீது மோதி தீப்பிடித்தது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த நார்வே, பிலிப்பைன்ஸ் நாடுகளின் தூதர்கள், மலேசியா, இந்தோனேஷிய நாட்டு தூதர்களின் மனைவிகள் உள்பட மொத்தம் 7 பேர் பலியாகினர்.

படுகாயம் அடைந்த இந்தோனேஷிய நாட்டு தூதர் புர்ஹான் முகம்மது (வயது 58) சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று இறந்தார். இதன்மூலம் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

அவரது உடல் நேற்று இரவு இந்தோனேஷியாவில் உள்ள யோக்யாகர்த்தாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தோனேஷிய நாட்டு தூதர் மரணம் அடைந்ததற்கு அந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரிட்னோ மார்சுட் இரங்கல் தெரிவித்து உள்ளார்.