Home நாடு பாலாவுக்கு டான்ஸ்ரீ – கருப்பண்ணன், கிருஷ்ணனுக்கு டத்தோ விருதுகள் வழங்கப்படலாம்!

பாலாவுக்கு டான்ஸ்ரீ – கருப்பண்ணன், கிருஷ்ணனுக்கு டத்தோ விருதுகள் வழங்கப்படலாம்!

528
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 30 – ஆண்டுதோறும் மாட்சிமை தங்கிய மாமன்னர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 6ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் மாமன்னர் பிறந்த தின விழாவை முன்னிட்டு இந்த முறை விருதுகள் பெறும் முக்கிய பிரமுகர்கள் யார் என்ற ஆரூடங்கள் மஇகாவில் உலவத் தொடங்கி விட்டன.

Datuk S Balakrishnanஜோகூர் மாநில மஇகா தலைவரான டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் மஇகாவின் சார்பில் டான்ஸ்ரீ விருது பெற, சிபாரிசு செய்யப்பட்டுள்ளார் என்ற ஆரூடம் மஇகாவில் பரவி வருகின்றது.

பாலகிருஷ்ணன் கடந்த 2013 மஇகா தேர்தலில் தேசிய உதவித் தலைவராக வெற்றி பெற்றார். இருப்பினும் பின்னர் சங்கப் பதிவிலாகா அந்தத் தேர்தலை செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து, விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் வழக்காக நீடித்துக் கொண்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

அடுத்து டத்தோ விருதுகள் பெறும் பட்டியலில், பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் எம்.கருப்பண்ணன், மற்றும் சுபாங் தொகுதி மஇகா தலைவர் கிருஷ்ணன் ஆகியோருக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

கருப்பண்ணன், ஒரு வழக்கறிஞருமாவார்.

மஇகாவின் நீண்ட கால உறுப்பினரான கிருஷ்ணன், சுபாங் தொகுதி மஇகாவின் தலைவராகப் பல ஆண்டுகள் சேவையாற்றி வருகின்றார்.