Home இந்தியா காவிரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைக் கலப்பதா? கர்நாடகா மீது தமிழகம் வழக்கு

காவிரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைக் கலப்பதா? கர்நாடகா மீது தமிழகம் வழக்கு

567
0
SHARE
Ad

???????????????????????????????சென்னை, ஜூன் 5- காவிரி நதி நீர்ப் பிரச்சனை தீராத பிரச்சையாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கர்நாடகா தண்ணீர் விடுவதில்லை என்று ஆண்டாண்டுகாலமாகப் பிரச்சனை புழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், புதிதாகக் கர்நாடகா அரசு காவிரியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரைக் கண்டு வந்து கலக்க விடுவதாகப் பிரச்சனை எழுந்துள்ளது.இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில்  வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தினமும்  1950 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதில் 148 கோடி லிட்டர் தண்ணீர் கழிவுநீராகப் பல வகையில் ஆறுகள்,  கால்வாய் வழியாக தமிழகம் வருகிறது.

பினாகினி, தென்பெண்ணை ஆறுகளின் வழியாக 88.9 கோடி லிட்டர் கழிவு நீரும், அர்காவதி, காவிரி ஆறுகளின் வழியாக 59.3 கோடி லிட்டர் கழிவு நீரும் தமிழகத்திற்கு வருகிறது.

கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் விடப்படுவதால் ரசாயனத்தின் அளவு அதிகமாக உள்ளது.தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காவிரியில் கலக்கும் நீரின் தன்மை குறித்துப் பரிசோதித்தனர்.

சோதனை முடிவில் அதிக அளவு மாசு இருப்பது உறுதியானது. இது தமிழக மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு சார்பில் கர்நாடகா மீது வழக்கு தொடர்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமை வகித்தார்.

அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், தலைமைச் செயலர் ஞானதேசிகன், பொதுப்பணித் துறை முதன்மை செயலர் பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.