புதுடில்லி, ஜூன்5, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான பிரதிநிதிகள் குழுக் கூட்டம் இன்று டில்லியில் தொடங்கியது.
இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தில், நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே :-
“இந்தியாவிற்கும், நெதர்லாந்துக்கும் இடையிலான உறவுகள் பழமையும், உறுதியும் வாய்ந்தவை. இந்தியாவின் தூய்மை இந்தியா திட்டத்திற்கும், மேக் இன் இந்தியா திட்டத்திற்கும் நெதர்லாந்து அதிகபட்ச உதவி அளிக்கும் ” என்றார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் நாளை மும்பை செல்கிறார். மும்பையில் நடக்கவிருக்கும் வணிக விவாதக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.அதோடு தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உட்பட்ட தாஜ் விடுதியைப் பார்வையிடுகிறார்.
இதையடுத்துப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.தனது இந்தியச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறு நாள் ஜூன் 7 ஆம் தேதி அவர் நெதர்லாந்து செல்வார் எனத் தெரிகிறது.