Home இந்தியா நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு கோயில் கட்டி வழிபாடு!

நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு கோயில் கட்டி வழிபாடு!

837
0
SHARE
Ad

prabhakaran_temple_002நாகை, ஜூன் 6 – நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு தி.மு.க. நிர்வாகி ஒருவர் கோயில் கட்டியது வழிபாடு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்ற திமுக நிர்வாகி தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.

Untitled.png,அந்த கோயிலில் நடுவில் யானையும், இடது புறத்தில் காவல் தெய்வம் அய்யனாரும், வலது பக்கத்தில் குதிரையை பிடித்த படி, கையில் துப்பாக்கியுடன் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கம்பீரமாக இருக்கும் சிலையை வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

Untitledமேலும், இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளார். இதனால், தமிழகத்தில் மற்ற பகுதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.