Home இந்தியா இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார் மோடி!

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார் மோடி!

490
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, ஜூன் 6 – இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை வங்கதேசம் புறப்பட்டுச் சென்றார். வங்கதேசம் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மோடி:-

“எனது இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளிடையேயான உறவு பலப்படும் எனவும், இதன் மூலம் இரு நாட்டு மக்களும் பயனடைவார்கள் எனவும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பயணத்தின் போது இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லை பிரச்சனைகள், ஊடுருவல் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தங்கள் பலவும் கையெழுத்தாக உள்ளன. மோடியை வரவேற்பதற்காக கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.