Home நாடு பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – நஜிப் அறிவிப்பு

பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – நஜிப் அறிவிப்பு

577
0
SHARE
Ad
Najib-Malaysia-Flagகோலாலம்பூர், ஜூன் 8 – பாஸ் கட்சித் தேர்தல் நிறைவடைந்து, ஹாடி அவாங் மீண்டும் தலைவராகியுள்ள நிலையில், இஸ்லாம் மக்கள் பயன்பெறும் வகையில் எந்த மாதிரியான பேச்சுவார்த்தைகளுக்கும் தயார் என அம்னோ தலைவரும், பிரதமருமான நஜிப் துன் ரசாக் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாஸ் கட்சியின் புதிய தலைமைத்துவம் இன்னும் கூடுதல் சிறப்பாக செயல்படும் என்பதில் தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார் என உத்துசான் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், பாஸ் கட்சியுடன் அம்னோ அரசாங்கத்தை அமைக்குமா என்ற கேள்விக்கு, இருகட்சிகளின் ஒத்துழைப்பு பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் இளைஞர் அணித் தலைவர் நிக் அப்து ஆகிய இருவரும் துணைப்பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் மற்ற தேசிய முன்னணி தலைவர்களுடன் ரணாவ் பகுதியில் நேற்று காணப்பட்டனர்.
சபா நிலநடுக்க மீட்புப் பணிகளை மொகிதின் யாசின் நேற்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.