Home இந்தியா ஆர்.கே.நகர் தொகுதியில் 4 பேர் வாபஸ்: ஜெயலலிதா உட்பட 28 பேர் போட்டி!

ஆர்.கே.நகர் தொகுதியில் 4 பேர் வாபஸ்: ஜெயலலிதா உட்பட 28 பேர் போட்டி!

651
0
SHARE
Ad

rk nagarசென்னை, ஜூன் 13- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்  வரும் 28-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இதில், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 32 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. காந்தியவாதி சசிபெருமாளின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அவர் தேர்தல் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மனுக்களை வாபஸ் பெறுவதற்குக்  கடைசி நாளான இன்று, தமிழ் மாநிலக் கட்சித் தலைவர் பால் கனகராஜ் மற்றும் 3 சுயேட்சை வேட்பாளர்கள்  மனுக்களை வாபஸ் பெற்றனர்.

அதன்பின்பு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.