Home கலை உலகம் ‘மொட்டைசிவா கெட்ட சிவா’ – ராகவா லாரன்சின் புதிய படம்.

‘மொட்டைசிவா கெட்ட சிவா’ – ராகவா லாரன்சின் புதிய படம்.

573
0
SHARE
Ad

29-1430314987-raghava-lawrence-500சென்னை,ஜூன்19- காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களை அடுத்து ராகவா லாரன்சின் வியாபார மதிப்பு பெருகிவிட்டது. அவரது சம்பளமும் 10 கோடி ரூபாயாகி விட்டது.

அவர் மீதான இரகிகர்களின் எதிர்பார்ப்பும், அவரது அடுத்த படம் என்ன, என்ன தலைப்பு என்கிற ஆர்வமும் அதிகரித்து விட்டது.

இந்நிலையில் அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

‘மொட்டை சிவா கெட்ட சிவா’ என்னும் புதிய படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி ராகவா லாரன்ஸ் கூறியதாவது:

“நான் இதற்கு முன்பு நடித்து இயக்கிய முனி, காஞ்சனா ஆகியவை பேய்ப் படங்கள். இப்போது நான் இயக்கி நடிக்கும் இந்தப் படம் பேய்ப் படம் இல்லை. ஆனால், திரைக்கதையில் திகில் இருக்கும். அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் கலந்து  மக்கள் இரசனைக்கேற்ற படமாக  இது இருக்கும்.

கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் யாரும் இன்னும் முடிவாவில்லை. இப்படத்தை வேந்தர் மூவிஸ் சார்பில் முதல் பிரதி அடிப்படையில் நான் தயாரிக்கிறேன்” என்றார்.

அவரது இந்தப் படமும் வெற்றியடைய வாழ்த்துவோம்.