Home இந்தியா மாயமான டோர்னியர் விமானத்தைக் கண்டுபிடிக்கக் கோரி விமான நிலையக் காவல்துறையிடம் புகார்!

மாயமான டோர்னியர் விமானத்தைக் கண்டுபிடிக்கக் கோரி விமான நிலையக் காவல்துறையிடம் புகார்!

477
0
SHARE
Ad

fliசென்னை, ஜூன் 19-  காணாமல் போன கடலோரக் காவல்படை விமானத்தையும் மூன்று விமானிகளையும் கண்டுபிடித்துத் தர வேண்டி விமான நிலையக் காவல்துறையில், கடற்படைத் தலைவர் புகார் செய்துள்ளார்.

காணாமல் போன அந்த விமானத்தைக் கடந்த 10 நாட்களாகத் தீவிரமாகத் தேடியும் இதுவரையிலும் எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை.

மாயமான தங்களது கணவரைக் கண்டுபிடிக்க பிரதமர் நேரிடையாகத் தலையிட்டு உதவ வேண்டும் என்று விமானிகளின் மனைவிகள் சமூகவலை தளங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

#TamilSchoolmychoice

தேடுதலின் அடுத்த கட்டமாக, ரிலையன்ஸின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல், கருப்புப் பெட்டியின் சமிக்ஞை கிடத்த பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில், பரங்கிமலைக் கடற்படைத் தலைவர் சந்தீப்சோப்ரா, விமான நிலையக் காவல்துறையிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், “கடந்த 8-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து கடற்படை விமானம் மற்றும் அதில் சென்ற விமானிகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வித்யாசாகர், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த எம்.கே.சோனி, சென்னை தில்லைகங்கா நகரைச் சேர்ந்த சுபாஷ்சுரேஷ் ஆகியோர் மாயமாகி உள்ளனர். இவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி விமான நிலையக் காவல்துறையினர், தமிழக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் 1934 விமானச் சட்டம், விமானங்கள் மாயமாவது மற்றும் விபத்துக்குள்ளாவது பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விமானம் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. கடைசியாக எந்த விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் பேசினார்கள்? என்ன பேசப்பட்டது? என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானம் மாயமாகி கடந்த 10 நாட்களுக்குப் பிறகு தற்போது காவல்துறையில் புகார் செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.

மேலும், விமான நிலையக் காவல்துறை வரலாற்றில் விமானம் காணாமல் போனதையும், விமானிகள் மாயமானதையும் கண்டுபிடித்துத் தருமாறு கொடுக்கப்பட்ட முதல் புகார் இதுவாகும்.