Home கலை உலகம் விஜய்க்கு மகளாகும் மீனாவின் மகள்!

விஜய்க்கு மகளாகும் மீனாவின் மகள்!

770
0
SHARE
Ad

meena-600x300சென்னை, ஜூன் 25- ரஜினிகாந்தின் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் முன்னணிக் கதாநாயகியாகி, ரஜினிக்கே இணையாகப் பல படங்களில் நடித்தார் என்பது சினிமா வரலாறு!

2009–ல் இவருக்குத் திருமணம் நடந்தது. தற்போது மீனாவுக்கு ஐந்து வயதில் ‘நைனிகா’ என்னும பெண் குழந்தை உள்ளது.

தற்போது நைனிகாவும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறாள்.

#TamilSchoolmychoice

புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதுப்படத்தில், விஜய்யின் மகளாக நைனிகா நடிக்கிறாள்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. மீனாவைப் போலவே நைனிகாவும் நடிப்பில் பிரகாசிப்பார் எனப் புகைப்படத்தைப் பார்த்தாலே தெரிகிறது!

Actress-Meena-daughter-Nainika