Home நாடு சட்டத்திற்குப் புறம்பாகச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 35 மலேசியர்கள், 2 சிங்கப்பூரர்கள் கைது!

சட்டத்திற்குப் புறம்பாகச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 35 மலேசியர்கள், 2 சிங்கப்பூரர்கள் கைது!

779
0
SHARE
Ad

singapore checkpoint

ஜோகூர் பாரு, ஜூன் 26 – ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற 37 பேர், சட்டத்திற்குப் புறம்பான வகையில் மலேசிய எல்லையைக் கடந்ததால், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் ரோஹைசி இப்ராகிம் இது குறித்துக் கூறுகையில், காஸ்வேயில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் இரயில் தண்டவாளங்களின் வழி அவர்கள் நடந்து சென்ற போது கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை கைது செய்யப்பட்ட அந்த  37 பேரில் 35 பேர் மலேசியர்கள் என்றும், 2 பேர் சிங்கப்பூரர்கள் என்றும் கூறப்படுகின்றது.

சிங்கப்பூரில் பணியாற்ற முறைப்படி ஆவணங்கள் வைத்திருக்கும் அவர்கள், அதிகாலையில் அதிகமான போக்குவரத்து காரணமாக இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

குடிநுழைவுச்சட்டப்படி, பிரிவு 5 (2), 56 (1A) ஆகியவற்றின் கீழ் இவ்வழக்குப் பதிவு செய்யப்படலாம் என ரோஹைசி தெரிவித்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட் அபராதமோ அல்லது 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.