Home அவசியம் படிக்க வேண்டியவை அன்வாரை வீட்டுக்காவலில் வைத்து மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

அன்வாரை வீட்டுக்காவலில் வைத்து மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

691
0
SHARE
Ad

Anwarகோலாலம்பூர், ஜூன் 30 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் தேவை என்பதால், அவரைச் சிறைச்சாலையில் இருந்து வீட்டுக்காவலில் வைக்கும் படி அவரது வழக்கறிஞர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அன்வாரின் வழக்கறிஞர்களான சிவராசா மற்றும் ஜாரெட் கென்செர் ஆகிய இருவரும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்வாரின் உடல்நிலை சரியான மருத்துவச் சிகிச்சைகள் இல்லாததால் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது.”

“சீரற்ற இரத்த அழுத்தம், சிறுநீரகத்தில் 4 செமீ அளவில் சதை வளர்ச்சி, தோள்பட்டையில் தசை வலி மற்றும் தீவிரமான மூட்டு வலி ஆகியவற்றின் காரணமாகப் பிப்ரவரி 10-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அன்வார் இதுவரை 6 கிலோ வரை எடை குறைந்திருக்கிறார்”

#TamilSchoolmychoice

“இது தவிர, அன்வாருக்குப் பசை இல்லாத உணவுகள் (gluten-free diet) மற்றும் தீவிர உடற்பயிற்சி சிகிச்சை ஆகியவை தேவைப்படுகின்றது. அந்த வசதி சுங்கைப் பூலோ சிறைச்சாலையில் இல்லை.” என்று தெரிவித்துள்ளனர்.