Home கலை உலகம் தலைக்கவசம் அணிந்து உங்க உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – கமல் அறிவுரை!

தலைக்கவசம் அணிந்து உங்க உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – கமல் அறிவுரை!

498
0
SHARE
Ad

kamalசென்னை, ஜூன் 30 – சினிமாவில் ‘சூப்பர் மேன்’ வானத்தில் பறக்கிறார். உங்களால் பறக்க முடியுமா? சினிமாவைப் பார்த்து இரசிகர்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காகத் தலைக்கவசம் பற்றியான விழிப்புணர்வை இரசிகர்களுக்குக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

“இருசக்கர வாகனத்தில் போகும் போது தலைக்கவசம் அணிந்து கொண்டு போகவேண்டும் என்று நாங்கள் கூறினால், சினிமாவில் நீங்க தலைக்கவசம் அணிவதில்லையே என்று எதிர்வாதமாக வைக்கப்படுகிறது”.

“சினிமாவில் நடிப்பவர்களுக்கு அருகில் எத்தனை பேர் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள் என்று உங்களுக்குப் படத்தில் தெரியாது. ஆனால் அந்தப் பாதுகாப்புடன் தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்”.

#TamilSchoolmychoice

“அதையெல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் பாதுகாப்பில்லாமல், தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டாம். சினிமாவில் ‘சூப்பர் மேன்’ பறக்குறார். உங்களால முடியுமா? அதுமாதிரி தான் இதுவும்”.

“தயவு செய்து தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுங்க. உங்க உயிரை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.