Home உலகம் அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து 3 பேர் பலி!

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து 3 பேர் பலி!

538
0
SHARE
Ad

1596நியூயார்க், ஜூன் 30 – அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்துக்கு உட்பட்ட லான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து, மசாசூசெட்ஸ் மாகாணத்தின் நார்வுட் நினைவு விமான நிலையத்துக்குச் சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

பீச்கிராப்ட் பி.இ.36 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 3 பேர் இருந்தனர். இந்த விமானம் பிளைன்வில்லிப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கிருந்த ஒரு வீட்டில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்துடன் சேர்ந்து அந்த வீடும் தீப்பிடித்து எரிந்தது.

article-2295462-18BF6CC6000005DC-518_634x422உடனே வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடித் தப்பினர். இந்தக் கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் விபரம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

#TamilSchoolmychoice

628x471விபத்துக் குறித்துத் தகவல் அறிந்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழுவினர், மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என அமெரிக்க காவலர்கள் தெரிவித்தனர்.