Home நாடு சிலாங்கூரில் பக்காத்தானின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க ஜசெக, பிகேஆர் இன்று சந்திப்பு!

சிலாங்கூரில் பக்காத்தானின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க ஜசெக, பிகேஆர் இன்று சந்திப்பு!

503
0
SHARE
Ad

Azmin Aliகோலாலம்பூர், ஜூன் 30 – சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணியின் எதிர்காலம் குறித்துக் கலந்தாலோசிக்க ஜசெக மற்றும் பிகேஆர் தலைவர்கள் இன்று கூடுகின்றனர். இந்தக் கூட்டத்தில் பாஸ் பங்கேற்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பு இன்று பிற்பகலில் சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜசெக சார்பில் சிலாங்கூர் ஜசெக தலைவர் டோனி புவா, துணைத்தலைவர் கோபிந்த் சிங் டியோ மற்றும் உதவித்தலைவர் தெங் சாங் கிம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதே வேளையில், டோனி புவாவும், “இந்தக் கூட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ள கூட்டம்” என்று ‘தி மலேசியன் இன்சைடரிடம்’ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணி உடைந்ததற்குப் பிறகு, ஜசெக, பிகேஆர் கட்சிகளிடையே நடக்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.