Home தொழில் நுட்பம் ஒருநாளில் பாதி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஒருநாளில் பாதி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

563
0
SHARE
Ad

TamilNews_3586694598198லண்டன், ஜூன் 30 – இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் நேரத்தில் 47 சதவிகிதத்தை வாட்சப், ஸ்கைப், இமெயில் போன்ற தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் செலவழிப்பதாகச் சுவீடனைச் சேர்ந்த தொலை தொடர்புச் சாதனங்கள் தயாரிக்கும் எரிக்சன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்களில் உள்ள நவீன தகவல் தொடர்பு வசதிகள் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் ஸ்மார்ட்போன் இணையத்தள சேவைக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகவும் எரிக்சன் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 7,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் 30 சதவீத நேரத்தைத் தகவல் தொடர்புச் செயலிகளில் செலவிடுகிறார்கள். காணொளிகள் பார்ப்பதற்கு வெறும் 20 சதவீதத்தை மட்டுமே செலவிடுவதும் தெரியவந்துள்ளது.