Tag: 15-வது பொதுத் தேர்தல்
கிளந்தான் : எல்லா 14 தொகுதிகளையும் பாஸ் வெற்றி கொண்டது
கோத்தா பாரு : பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாஸ் கட்சி கிளந்தான் மாநிலத்தின் அனைத்து 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இது கிளந்தான் அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
அலோர்காஜா (மலாக்கா) – அட்லி சஹாரி வெற்றி
மலாக்கா : அலோர்காஜா நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராகப் போட்டியிட்ட அட்லி சஹாரி வெற்றி பெற்றிருக்கிறார். இவர் மலாக்கா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாராவார்.
பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி அதிக தொகுதிகளுடன் முன்னணி – ஆட்சி அமைக்க முடியுமா?
கோலாலம்பூர் : இதுவரையில் வெளிவந்த அதிகாரத்துவ முடிவுகளின்படி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி மிக அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னணி வகிக்கிறது. நள்ளிரவு 12 மணிவரையில் மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரத்துவத்...
துங்கு ரசாலி ஹம்சா குவா மூசாங் தொகுதியில் தோல்வி
குவா மூசாங் : பல தவணைகளாக தற்காத்து வந்த கிளந்தான் குவா மூசாங் தொகுதியில் அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தோல்வியடைந்தார்.
சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றி – யாருடன் கூட்டணி அமைக்கும்!
கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 15 தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி இதுவரை கைப்பற்றியுள்ளது. மேலும் சில தொகுதிகளில் ஜிபிஎஸ் முன்னணி வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து மேற்கு மலேசியக் கட்சிகள்...
பாடாங் தெராப் : தேசிய முன்னணியின் மகாட்சிர் காலிட் தோல்வி – பெரிக்காத்தான் வெற்றி
பாடாங் தெராப்: அம்னோவின் உதவித் தலைவரான மகாட்சிர் காலிட் கெடாவின் பாடாங் தெராப் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார். தேசிய முன்னணி வேட்பாளராக, அம்னோவின் சார்பில் போட்டியிட்ட அவர், பெரிக்காத்தான் கூட்டணியின் பாஸ் வேட்பாளர்...
சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி – பல தொகுதிகளில் முன்னணி
கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி இதுவரை கைப்பற்றியுள்ளது.
நடப்பு பொதுப் பணி அமைச்சர் ஃபாடில்லா யூசோப் 46 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற...
வாக்களிப்பு விழுக்காடு : பிற்பகல் 4.00 மணி வரையில் 70% வாக்களிப்பு
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில் பிற்பகல் 4.00 மணி வரையிலான வாக்களிப்பு 70 விழுக்காடு என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்களிப்பு மையங்கள்...
15-வது பொதுத் தேர்தல் : வாக்களித்த தலைவர்கள்
இன்று சனிக்கிழமை நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில் வாக்களித்த முக்கியத் தலைவர்களின் படக் காட்சிகள் :
வாக்களிப்பு விழுக்காடு : பிற்பகல் 3.00 மணி 65% வாக்களிப்பு
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது. காலை 11.00 மணிவரையில் மொத்த வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து பிற்பகல்...