Home நாடு சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றி – யாருடன் கூட்டணி அமைக்கும்!

சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றி – யாருடன் கூட்டணி அமைக்கும்!

476
0
SHARE
Ad

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 15 தொகுதிகளை ஜிபிஎஸ் கூட்டணி இதுவரை கைப்பற்றியுள்ளது. மேலும் சில தொகுதிகளில் ஜிபிஎஸ் முன்னணி வகிக்கிறது.

இதைத் தொடர்ந்து மேற்கு மலேசியக் கட்சிகள் பெரும்பான்மை பெறுவதில் இழுபறி நிலை நீடிப்பதால் ஜிபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலை எழுந்துள்ளது.

நடப்பு பொதுப் பணி அமைச்சர் ஃபாடில்லா யூசோப் 46 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று பெத்ரா ஜெயாவில்  வெற்றி பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

இறுதியில் ஜிபிஎஸ் 25 தொகுதிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்காத்தான் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா? அல்லது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி-தேசிய முன்னணி இணைந்த கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முற்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.