Selangor Police deepen probe into toxic Alcohol poisoning
SHAH ALAM -- The Selangor police have intensified cooperation with various agencies in their investigation into the toxic alcohol poisoning that has claimed 24 lives in the state since Sept 17. Selangor Police chief Datuk Mazlan Mansor said the cooperation of the Ministry of Health and the Customs Department was sought to inspect premises allegedly selling the liquor and to identify...
சாகிர் நாயக்: முஜாஹிட் அறிக்கைக்கு இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபரப்புரையாளர் சாகிர் நாயக் பிற சமயத்தை கேலி செய்து இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்வதை, இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசுப் ரவா சாடியுள்ளதை மலேசிய இந்து தர்ம மாமன்றம் வரவேற்றுள்ளது. இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் முஜாஹிட் அண்மையில் விடுத்த பத்திரிக்கை செய்தியில் இந்திய முஸ்லிம் இஸ்லாமிய மதப் பரப்புரையாளர் சாகிர் நாயக்கை சாடியுள்ளார். இந்நாட்டிலுள்ள பிற சமயங்களைப் வம்புக்கு இழுக்கும் தோரணையிலும் பரிகசிக்கும் வகையிலும் இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்வதை சாடியுள்ளதை, நம் நாட்டு பல்லின...
அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: ஏமாற்றம்…போரடிப்பு…பொருத்தமில்லா நடைமுறை!
கோலாலம்பூர் – கடந்த சில வாரங்களாக அஸ்ட்ரோவில் ஒளியேறி வரும் சிறந்த பாடகர்களுக்கான போட்டி நிகழ்ச்சியான ‘சூப்பர் ஸ்டார்’ உண்மையிலேயே ஏமாற்றமளிப்பதாகவும், ஒரு பாட்டுத் திறன் போட்டிக்கான கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை என்பதையும் வருத்ததுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இதே கருத்தைத்தான், பல செல்லியல் வாசகர்களும் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடல் திறன் போட்டிக்கு இருக்க வேண்டிய, பரபரப்பு, எதிர்பார்ப்பு, விறுவிறுப்பு என எந்தவித அம்சங்களும் இதில் இல்லை. முதல் கட்டமாக போட்டியின் கட்டமைப்பே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், அறிவிப்பாளர்கள் மட்டும் நொடிக்கு...
பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் ரகிம் கைது
புத்ரா ஜெயா- தபோங் ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவரும் அம்னோவைச் சேர்ந்த பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அப்துல் அசிஸ் அப்துல் ரகிமும் அவரது சகோதரர்களில் ஒருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். அவர்களின் கைதுக்கான காரணம் இதுவரையில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. கடந்த மே 23-ஆம் தேதி அசிசின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் ஊழல் தடுப்பு ஆணையம் 5 இலட்சம் ரிங்கிட் ரொக்கத்தையும், மேலும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பலநாட்டு...
Corrupt people must be punished, says Mahathir
LONDON -- Malaysian Prime Minister Tun Dr Mahathir Mohamad said Monday that corrupt people must be punished but he did not think that it has reached a stage in Malaysia where the corrupt should be sentenced to life imprisonment. "They (corrupt individuals) might be jailed. How long they need to be jailed depends on the extent of the corruption, and I...
உலகின் சிறந்த விளையாட்டாளர் விருதை இழந்தார் ரொனால்டோ
இலண்டன் – நேற்று திங்கட்கிழமை இரவு இலண்டனில் நடைபெற்ற பிஃபா எனப்படும் (FIFA) உலகக் காற்பந்து சம்மேளனத்தின் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டின் உலகிலேயே சிறந்த காற்பந்து விளையாட்டாளராக குரோஷியா நாட்டின் விளையாட்டாளர் லுக்கா மோட்ரிக் முடிசூட்டப்பட்டார். 2007-ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் காக்கா என்ற விளையாட்டாளர் சிறந்த காற்பந்து வீரர் பட்டத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன்பின்னர் போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி என இருவர் மட்டுமே மாறி மாறி ஆண்டுதோறும் இந்த விருதை வென்று வந்துள்ளனர். இப்போதுதான் முதன் முறையாக...
குலு மணாலியில் கார்த்தி படக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு
சிம்லா - இமாச்சலப் பிரதேசத்திலுள்ள குலு மணாலி பிரதேசம் கடும் மழை, திடீர் வெள்ளம் காரணமாக மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு படப்பிடிப்புக்காகச் சென்ற நடிகர் கார்த்தியின் 'தேவ்' படக் குழுவினர் அந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். 140 பேர் கொண்ட படக் குழுவினர் குலு மணாலி வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. வெள்ளத்தின் காரணமாக மோசமாகப் பாதிப்படைந்துள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு வருவதன் காரணமாக, படக்குழுவினர் சென்னை திரும்ப ஓரிரு நாட்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைத் தீவில் ஆட்சி மாற்றம் – இப்ராஹிம் முகமது சோலிஹ் அதிபராகிறார்
மாலே - இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் கடல் மார்க்கமான அண்டை நாடாகவும், சிறிய தீவு நாடாகவும் திகழும் மாலத் தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் அப்துல்லா யாமீனைத் தோற்கடித்து புதிய அதிபராக எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றி பெற்றிருக்கிறார். அழகிய தீவுகளைக் கொண்ட நாடு மாலத் தீவாகும். நடப்பு அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வேட்பாளராக இப்ராஹிம் முகமது சோலிஹ் என்பவரை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தின. இவர் 58.4 விழுக்காடு வாக்குகள் பெற்று...
திருமுருகன் காந்தி சிறையில் மயங்கி விழுந்தார்
சென்னை – கடந்த 45 நாட்களாக வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மே17- இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு (படம்) திடீரென சர்க்கரை அளவும், இரத்த அழுத்தமும் குறைந்ததைத் தொடர்ந்து சிறையில் மயங்கி விழுந்தார். தமிழக அரசு திருமுருகன் காந்தி மீது தொடுத்திருக்கும் சில வழக்குகளின் காரணமாக அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். 45 நாட்களாகத் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் பகலில்கூட சிறையில் இருக்கும் மற்றவர்களைச் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை என்றும்...
நசிர் ரசாக் சிஐஎம்பி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரரும் நாட்டின் முன்னணி வங்கித் துறை நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான நசிர் ரசாக் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அந்தக் குழுமத்தில் வகிக்கும் மற்ற பொறுப்புகளில் இருந்தும் எதிர்வரும் 31 டிசம்பர் 2018-இல் விலகுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிஐஎம்பி ஓர் அரசு சார்பு நிறுவனமாகும். நீண்ட காலமாக இந்த வங்கிக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலும் பின்னர் தலைவர் பொறுப்பிலும் நீடித்து வந்த நசிர் ரசாக் தனது பதவிக் காலத்தின்...