MACC to publish asset declaration of govt Parliamentary members

MACC

KUALA LUMPUR - The Malaysian Anti-Corruption Commission (MACC) will download the asset declaration of Pakatan Harapan  (PH) cabinet and parliamentary members at its portal from next month. MACC deputy chief commissioner (Prevention) Datuk Shamsun Baharin Mohd Jamil said this was to ensure that all PH leaders were free from corruption. “It will be for the first time that the asset declaration will...

நஜிப் மீண்டும் கைது! நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

புத்ராஜெயா - இன்று புதன்கிழமை பிற்பகல் 4.13 மணியளவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் கைது செய்தது. அவரது சொந்த வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டது தொடர்பில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நஜிப் கைது செய்யப்பட்டார். நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்திற்கு (செஷன்ஸ் நீதிமன்றம்) நஜிப் கொண்டு வரப்பட்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் முறையாகத் சுமத்தப்படும்.

யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்! சில ஆலோசனைகள்…

கோலாலம்பூர் - நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 20) தொடங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களுக்கும், குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கல்வி அமைச்சின் புள்ளி விவரங்களின்படி நாடு முழுமையிலும் 440,743 மாணவர்கள் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களும் அடங்குவர். செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக 8,100 தேர்வு மையங்கள் செயல்படும். தேர்வுகளுக்கு செல்வதற்கு முன்னால் - மாணவர்களாகிய நீங்கள்...

போர்ட்டிக்சன் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் கூடுகிறது

புத்ரா ஜெயா - போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலியானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களுக்கான தேதிகளை முடிவு செய்ய மலேசியத் தேர்தல் ஆணையம் நாளை வியாழக்கிழமை கூடுகிறது. இதனை அறிவித்த தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ முகமட் எலியாஸ் அபு பாக்கார், நாளை நடைபெறும் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஓத்மான் மாஹ்முட் தலைமை வகிப்பார் என்றும் தெரிவித்தார். இடைத் தேர்தல்களுக்கான தேதிகள், வாக்காளர் பட்டியல், போன்ற விவகாரங்களை இந்தக் கூட்டம் விவாதித்து முடிவெடுக்கும். டேன்யல் பாலகோபால் அப்துல்லா தனது நாடாளுமன்ற உறுப்பினர்...

Lawyer Muhammad Shafee settles remaining bail payment of RM500,000

KUALA LUMPUR -- Prominent lawyer Tan Sri Muhammad Shafee Abdullah, who is facing two charges with receiving money from unlawful activities amounting to RM9.5 million from former prime minister Datuk Seri Najib Tun Razak and two counts of making incorrect filings under the Income Tax Act 1967, yesterday posted the remaining bail of RM500,000. The payment was made by his son,  Muhammad Farhan, who is part...

‘Fruit Terrorism’ grips Australia as needle is found in Apple

SYDNEY -- A shocked Sydney mother has found a needle hidden inside an apple that she bought from one of the country's major supermarket chains. According to Xinhua news agency, The Seven Network reported Tuesday the woman said she discovered the object when she began cutting the apple into pieces for her children. "I just thought, wow this can't possibly be happening," she said. "Not in...

21 இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டும் “கொரில்லா” குறுமுன்னோட்டம்

சென்னை - அடுத்து வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் "கொரில்லா". ஒரு குரங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் படத்திற்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் இயல்பாகவே கூடியிருக்கிறது. ஜீவா கதாநாயகனாக நடிக்க, ராதாரவி, யோகிபாபு, சதீஷ் ஷாலினி பாண்டே நடித்திருக்கும் இந்தப் படத்தின் குறு முன்னோட்டத்தைக் (டீசர்) கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி நடிகர் சூர்யா வெளியிட, சில நாட்களிலேயே இதன் பார்வையாளர் எண்ணிக்கை யூடியூப் தளத்தில் 21 இலட்சத்தையும் தாண்டிவிட்டது. பொதுவாக முன்னணி இயக்குநர்கள், உச்ச நட்சத்திரங்களின் முன்னோட்டங்களுக்குத்தான் இதுபோன்று சில...

அஸ்ட்ரோவில் மேலும் 2 புதிய எச்.டி அலைவரிசைகள்

கோலாலம்பூர் - ஏற்கனவே விண்மீன் என்ற துல்லிய ஒளிபரப்பு அலைவரிசையைக் கொண்டுள்ள அஸ்ட்ரோ நாளை புதன்கிழமை முதல் மேலும் இரண்டு புதிய துல்லிய ஒளிபரப்பு அலைவரிசைகளை (எச்.டி) தொடக்குகின்றது. ஸீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் என அந்த இரண்டு அலைவரிசைகளும் தற்போது இந்தியாவில் இயங்கி வருகின்றன. அதன் உள்ளடக்கங்களைக் கொண்டு தொடங்கப்படவிருக்கும் இந்த இரண்டு புதிய அலைவரிசைகளும் இனி 232 (ஸீ தமிழ்) மற்றும் 233 (கலர்ஸ் தமிழ்) ஆகிய அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும். விண்மீண் தொடர்ந்து 231 அலைவரிசையில் ஒளிபரப்பாகி வரும். ஏற்கனவே, இந்தி...

முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் - அம்னோவின் முன்னாள் அனைத்துலக வாணிப, தொழிலியல் அமைச்சரும், நடப்பு ஜெலி (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகுவதாக அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற அம்னோ தேர்தலில் முஸ்தாபா முகமட் மிக அதிகமான வாக்குகளில் அம்னோ உச்சமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, அரசியல் வட்டாரங்களில் அவரது முடிவு எதிர்பாராத - அதிர்ச்சிகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தனது 40 ஆண்டுகால சேவையோடு அம்னோவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கும் முஸ்தாபா அம்னோ மீதான நம்பகத் தன்மை படுவீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில்,...

சட்டவிரோதமாக வெளியேறினேனா? மறுக்கிறார் ஜமால் முகமட்!

கோலாலம்பூர் - சட்டவிரோதமான முறையில் கடந்த மே மாதம் நாட்டை விட்டு வெளியேறியதற்காக இன்று செவ்வாய்க்கிழமை அம்பாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனுஸ் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். 48 வயதான ஜமால் முகமட், கடந்த மே 25-ஆம் தேதி அம்பாங் புத்திரி மருத்துவமனையில் இருந்து வெளியேறி சட்டவிரோதமான பாதைகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். குடிநுழைவுத் துறையின் சட்டத்தின் அடிப்படையிலான இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஜமால் முகமட்டுக்கு 10 ஆயிரம்...