Japanese Businessman to become first private Moon tourist

WASHINGTON – Japanese billionaire Yusaku Maezawa is set to become the first private paying customer to ride around the Moon aboard SpaceX's next generation rocket, Xinhua news agency reported  on Tuesday. S company SpaceX revealed on Monday that Maezawa, the founder of Japan's largest online clothing retailer site Zozotown, wanted  to join the programme in 2023, and he would invite six to eight artists to come...

“Fugitive” billionaire Vijay Mallya ignites war of words in India

NEW DELHI -- A "fugitive" billionaire has ignited a war of words in India after saying he met the country's finance minister before leaving in March 2016. Vijay Mallya, now living in Britain, was a politically influential Indian tycoon who controlled a huge alcohol business and the defunct Kingfisher Airlines. The Indian government is seeking his return while local banks are...

கலக்குகிறார் ஓஷோ! இந்த முறை நெட்பிலிக்சில்…

ஹாலிவுட் – பகவான் ரஜனீஷ் என அழைக்கப்பட்டு பின்னர் ஓஷோ என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற – அதே சமயத்தில் பல சர்ச்சைகளுக்கும் உரியவரான - ஓஷோவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 1990-ஆம் ஆண்டில் அவர் தனது 58-வது வயதில் மறைந்து விட்டாலும் இன்றுவரை அவரது தத்துவங்கள் அவரது நூல்கள் மூலமாகவும், காணொளிகள் மூலமான அவரது உரைகள் மூலமாகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். இன்று கார்ப்பரேட் சாமியார்கள் என அழைக்கப்படும் ஆன்மீகவாதிகளுக்கு முன்னோடியும் ஓஷோதான். அமெரிக்காவில் அவர் வாழ்ந்த காலத்தில்...

கோத்தா கினபாலுவில் மலேசிய தினக் கொண்டாட்டம்

கோத்தாகினபாலு - கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா தினம் சபாவில் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு பிரதமர் துன் மகாதீர் அன்றிரவு கோத்தா கினபாலுவுக்கு வருகை தந்தார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் துன் மகாதீர் சபா மாநிலத்திற்கு வருகை தருவது இதுவே முதன் முறையாகும். அவருக்கும் அவரது துணைவியாருக்கும் சபா மாநில முதலமைச்சர் ஷாபி அப்டாலும், சபா பக்காத்தான் தலைவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சில மத்திய அமைச்சர்களும் மலேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:  

“வாக்காளர்களுக்குப் பணம் வழங்கவில்லை” – சிவராஜ் சாட்சியம்

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தலில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி.சிவராஜ் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகப் பெற்ற வெற்றி செல்லாது என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜசெக-பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர் எம்.மனோகரன் தொடுத்துள்ள வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை சிவராஜ் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். “கேமரன் மலை பூர்வ குடியினரின் கிராமத் தலைவர்களுக்கும் (தோக் பாத்தின்) மற்ற பூர்வ குடி (ஓராங் அஸ்லி) வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்ததாகக் கூறப்படுவது உண்மையில்லை” என அவர் தனது சாட்சியத்தில் மறுத்தார். பூர்வகுடி கிராமத் தலைவர்களுக்கு...

சூறாவளி : தென்சீனாவில் 3 மில்லியன் பேர் வெளியேற்றம்

ஹாங்காங் - பிலிப்பைன்சில் கடும் சேதங்களை ஏற்படுத்திய 'மங்குட்' சூறாவளி ஹாங்காங்கிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு தற்போது வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிலையில் தென் சீனா பகுதியிலுள்ள 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை குவாங்டோங் வட்டாரத்தை மங்குட் சூறாவளி தாக்கியதில் நால்வர் மரணமடைந்தனர். குவாங்டோங் சீனாவின் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகையைக் கொண்ட வட்டாரமாகும். ஹாங்காங்கில் மணிக்கு 173 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதைத் தொடர்ந்து தென் சீனாவிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹாங்காங்கைத் தாக்கிய சூறாவளியினால் கூரைகள்...

பஞ்சாப் பொற்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ்

தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து உலா வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அண்மையில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் வீற்றிருக்கும் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலுக்கு வருகை மேற்கொண்ட நயனும் விக்னேஷூம் அங்கு பயபக்தியோடு வழிபட்டதோடு, மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சப்பாத்தி உணவையும் உட்கொண்டனர். அந்தப் புகைப்படங்களை சமூக ஊடகங்களிலும் அந்த இணை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. அந்தப் படங்களில் சில உங்களின் பார்வைக்கு:-

தேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்

கோலாலம்பூர் - ஆளும் கட்சியாக தேசிய முன்னணி வலுவுடன் திகழ்ந்து வந்த காலகட்டங்களில் மஇகாவில் பல தருணங்களில் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களினால் புதிய இந்தியர் கட்சிகள் தோற்றம் கண்டிருக்கின்றன. எனினும் அந்தக் கட்சிகளெல்லாம் தொடர்ந்து தேசிய முன்னணிக்கே ஆதரவு தந்து வந்தன. அவற்றுள் ஒன்று அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனால் தொடங்கப்பட்ட ஐபிஎப் கட்சி. ஐபிஎப் உள்ளிட்ட அந்தக் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக் கொண்டு அவற்றுடன் தேசிய முன்னணி இணக்கமாக செயல்பட்டாலும், இந்த இந்தியர் கட்சிகளை இறுதிவரை கூட்டணியில் மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் தேசிய முன்னணியின் தலைமைத்துவம்...

முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அடிப் அடாம் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

மலாக்கா – முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமட் அடிப் முகமட் அடாம் துன் மகாதீர் தலைமையிலான பெர்சாத்து கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். அவர் அம்மாநிலத்தின் 5-வது முதலமைச்சராக 1978 முதல் 1982 வரை பணியாற்றினார். அவருக்குப் பின்னர் டான்ஸ்ரீ அப்துல் ரஹிம் தம்பி சிக் மலாக்கா முதலமைச்சராகப் பதவியேற்றார். சனிக்கிழமை இரவு (செப்டம்பர் 15) மலாக்கா சுங்கை ரம்பையில் நடைபெற்ற பெர்சாத்து கட்சி நிகழ்ச்சியில் அடிப் அடாம் அந்தக் கட்சியில் இணைந்தார். தனது உறுப்பினர் பாரத்தை அவர் பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும், பிரதமரின் அரசியல்...

கிளேர் ரியூகாசல் சிங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை

சிங்கப்பூர் – 1எம்டிபி ஊழல் விவகாரங்கள் தொடர்பாக தொடர் போராட்டம் நடத்தி வந்த சரவாக் ரிப்போர்ட் ஊடக நிறுவனர் கிளேர் ரியூகாசல் பிரவுன் சனிக்கிழமை (15 செப்டம்பர்)  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த வாரம் கிளேர் பிரவுன் 1எம்டிபி ஊழல் குறித்த புலனாய்வுகள் அடங்கிய நூல் ஒன்றையும் கோலாலம்பூரில் வெளியிட்டார். அந்த நூல் பரபரப்பாக விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற அவர் விமான நிலையத்தில்...