Home நாடு “தடை செய்யப்பட்ட பொருளை அளித்தது ரோஸ்மா அல்ல” – லீ சோங் வெய்

“தடை செய்யப்பட்ட பொருளை அளித்தது ரோஸ்மா அல்ல” – லீ சோங் வெய்

867
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 30 – தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை தனக்களித்தது பிரதமர் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அல்ல என்று தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய் தெரிவித்துள்ளார்.

டெக்சாமிதேசோன் என்ற பொருள் அடங்கிய ஊக்க மருந்தை லீ சோங் வெய் உட்கொண்டது நிரூபிக்கப்பட்டதன் பேரில் அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் அவருக்கு 8 மாத தடை விதித்துள்ளது.

Lee Chong Wei

#TamilSchoolmychoice

இந்நிலையில் அச்சம்மளனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 2005ஆம் ஆண்டு மலேசியாவின் பிரபல பிரமுகர் ஒருவரின் மனைவியுடன் லீ அறிமுகமானதாகவும், இதையடுத்து கடந்த 2007-2008ஆம் ஆண்டுகளில் அப்பெண்மணி தடை செய்யப்பட்ட அம்மருந்தை லீக்கு அளித்ததாகவும் தெரிவித்துள்ளது.

அப்பெண்மணி ஓய்வு பெற்ற மசீச தலைவர் ஒருவரின் மனைவி என்று கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட பொருளை மாத்திரை வடிவில் லீக்கு அவர் தொடர்ந்து பரிசளித்து வந்துள்ளார்.

“சீன பாரம்பரிய மருந்தான அப்பொருளை எனக்கு நெருக்கமான அப்பெண்மணியே அளித்து வந்தார். நல்ல நோக்கத்துடனேயே அவர் அதைத் தந்தார். அவர் பெயரை வெளியிட இயலாது. அதேசமயம் அப்பொருளை அளித்தது டத்தின்ஸ்ரீ ரோஸ்மா அல்ல என்பது உறுதி,” என்றார் லீ சோங் வெய்.

8 மாத கால தடை இம்மாதத்துடன் முடிவுக்கு வருவதால். மே 1ஆம் தேதி முதல் லீ சோங் வெய் மீண்டும் அனைத்துலக போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.