Home நாடு இஸ்லாம் அல்லாத மாணவர்களைச் சிறுநீரைக் குடிக்கச் சொன்ன ஆசிரியர்!

இஸ்லாம் அல்லாத மாணவர்களைச் சிறுநீரைக் குடிக்கச் சொன்ன ஆசிரியர்!

773
0
SHARE
Ad

unnamedசுங்கைப் பட்டாணி, ஜூன் 22 – கெடா மாநிலம் சுங்கைப் பட்டாணியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் இஸ்லாம் அல்லாத மாணவர்களை வகுப்பறையில் தண்ணீர் அருந்தக்கூடாது என்றும், கழிவறைக்குச் சென்று தண்ணீர் அருந்தும் படியும் மூத்த ஆசியர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவ விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அந்த மூத்த ஆசிரியர் மாணவர்கள் முன், தண்ணீர் கொண்டு வரவில்லையென்றால், ‘குழாயில் இருந்து தண்ணீர் குடியுங்கள் அல்லது சிறுநீரைக் குடியுடிங்கள்’ என்று  கூறியுள்ளதாக நேற்று நட்பு ஊடகங்களில் பரவிய புகார் கடிதம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

“அந்த ஆசிரியர் கூறியிருப்பது காட்டுமிராண்டித் தனமாகவும், அருவருக்கத்தக்க  வகையிலும் உள்ளது. இஸ்லாம் அல்லாத மாணவர்களிடத்தில் இப்படிப்பட்ட பேச்சு இனவாதத்தைத் தூண்டிவிடுவதாக உள்ளது. அந்த ஆசிரியர் இஸ்லாம் அல்லாத மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களின் உணர்வுகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகின்றது.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள கல்வித் துணையமைச்சர் கமலநாதன்,

சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கெடா மாநிலக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.