Home உலகம் என் தலைமையின் கீழ் பாகிஸ்தான் செழிப்பாக இருந்தது- முஷாரப்

என் தலைமையின் கீழ் பாகிஸ்தான் செழிப்பாக இருந்தது- முஷாரப்

507
0
SHARE
Ad

musharafஇஸ்லாமாபாத், மார்ச் 28-இந்தியாவின் எல்லைக்குள் கடந்த 1999ம் ஆண்டு நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபொழுது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த தாக்குதல் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷரப் பதவி வகித்தார். சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய முஷரப்பிடம் இச்சம்பவம் தொடர்பாக நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில், பாகிஸ்தானைப் பற்றியும் பாகிஸ்தானியர்களைப் பற்றியும் சிந்திப்பவர்களில் நானும் ஒருவன். கார்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக நான் பெருமைப்படுகிறேன். எனது தலைமையின் பாகிஸ்தான் செழிப்பாக இருந்தது.

#TamilSchoolmychoice

அப்போது சமூக விரோத சக்திகள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக நான் தைரியமாக குரல் எழுப்பினேன். பாகிஸ்தானின் நலனை முன்னிட்டு தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரை ஆதரித்தேன்.

இந்த முடிவை நான் எடுத்திராவிட்டால் பாகிஸ்தானின் எதிர்காலம் வேறுமாதிரி ஆகியிருக்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் செல்வாக்கு நிறைந்த கராச்சியில் போட்டியிடுவேன் என்று கூறினார்.