Home நாடு சுங்கை பத்து தொல்லியல் தளத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

சுங்கை பத்து தொல்லியல் தளத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

953
0
SHARE
Ad

சுங்கைப் பட்டாணி: தென்கிழக்காசியாவின் பழங்கால நாகரிகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியில், சுங்கைபத்துவில் உள்ள தொல்லியல்தளத்தில் ஆய்வுகள் துரிதப்படுத்தப்படும் என சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சர் முகமட் பக்தியார் வான் சிக் கூறினார்.

இது தொடர்பாக, அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகத்தின் மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றிற்காக அரசாங்கம் 10 மில்லியன் ரிங்கிட்டை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் மொத்தம் 30 மில்லியன் ரிங்கிட் இத்தொல்லியல் தளத்திற்காக ஒதுக்கப்பட்டது. அதன், முதல் கட்டப் பணிகளுக்காக முதலில் 10 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஆயினும், இப்பகுதியை பாதுகாப்பு இடமாக கெடா மாநிலம் அறிவிக்க வேண்டும் என்றும், பழங்கால வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் அப்பகுதியின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் தாம் இந்தியா சென்றிருந்த போது, அங்குள்ள பழங்கால தொல்லியல் தளங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பார்வையிட்டதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை பாதுகாப்பது ஒரு நீண்ட, மிகச்சரியான செயல்முறை என்பதை உணர்ந்ததாக அவர் கூறினார்.

இப்பகுதியை முதலில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், சுற்றுலாத் தளமாக அல்ல,” என்று அமைச்சர் கூறினார்.

2,000 ஆண்டுகளுக்கு முன்னால் இப்பகுதி இரும்பு உருக்கும் தொழில்துறை நகரமாக இருந்திருப்பதை சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆயினும், இந்தப் பகுதியின் பழங்கால மக்களின் அடையாளம் இன்னமும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சோழர்களின் படையெடுப்பு கடாரத்தின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது குறித்த ஆய்வுகள் முழுமையடையாதப் பட்சத்தில், இந்தியர்கள் மத்தியில் இப்பகுதியானது, சோழர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தப் பகுதியாகக் கருதப்பட்டு வருகிறது. ஆயினும், சோழர்களின் ஆட்சி இப்பகுதியில் நிலவியது எனும் கூற்றுக்கு ஒத்துக் போகும் சான்றுகள் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அக்காலக் குடியிருப்பு பகுதிகள் எங்கே உள்ளன என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தேடுகிறார்கள். அதுவரை, இப்பகுதியின் மர்மம் நீண்டுக் கொண்டே போகும்”, என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டத்தோ டாக்டர் மொக்தார் சாய்டின் கூறினார்.