Home நாடு தீவிரவாதம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், விழிப்பு நிலை அவசியம்!

தீவிரவாதம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், விழிப்பு நிலை அவசியம்!

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மலேசியர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார்.

எந்த ஒரு தீவிர வன்முறைகளையும், குறிப்பாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது என அவர் எச்சரித்தார்.

இம்மாதிரியான, தாகுதல்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, நாம் தான் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் கருதி இம்மாதிரியான அச்சுறுத்தல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். டாயிஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் மட்டும் அல்ல, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எந்த ஒரு அமைப்பும், தனி நபரும் தொடக்கத்திலேயே முடக்கிவிட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போரிடவும், மலேசிய காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கூறினார்.