Home உலகம் சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு

சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு

512
0
SHARE
Ad
indexதுபாய், ஏப். 6- சவுதி அரேபியாவில் பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்தும்படி வினோத தீர்ப்பளிக்கப்பட்டது.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அலி அல் கவாகர் (24). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அலி தாக்கியதில் அவரது நண்பரின் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டது. அதனால், அவரை பக்கவாதம் நோய் தாக்கியது.
தற்போது அவர் சக்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட அலி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கண்ணுக்கு கண் என்பதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நண்பருக்கு ஏற்பட்டது போன்று அலிக்கும் பக்கவாதம் நோய் ஏற்படுத்தும்படி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க பாதிக்கப்பட்ட நண்பருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நஷ்டஈடு (ரொக்க பணம்) வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு உலக நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன. ஆனால் அதை சவுதி அரேபியா அரசு கண்டு கொள்ளவில்லை.