Home உலகம் சவூதி அரேபியாவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து – 11 பேர் பலி!

சவூதி அரேபியாவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து – 11 பேர் பலி!

560
0
SHARE
Ad

saudi1ரியாத் – சவூதி அரேபியாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றின் தொழிலாளர்கள் குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர்.

சவூதி அரேபியாவின் கிழக்கு நகரமான கோபாரில் இயங்கி வரும் ‘சவூதி அரம்கோ’ (Saudi Aramco) என்ற எண்ணெய் நிறுவனத்தின் தொழிலாளர்கள் குடியிருப்பின் கீழ் தளத்தில், நேற்று திடீரென தீ பற்றி எரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட சமயம் அதிகாலை நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தீ விபத்து பற்றி உணர்வதற்குள் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும், இந்த கோர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.