Home உலகம் இலண்டனில் அபாய நிலை அறிவிப்பு – கட்டடங்களில் அதிரடி சோதனை

இலண்டனில் அபாய நிலை அறிவிப்பு – கட்டடங்களில் அதிரடி சோதனை

851
0
SHARE
Ad

london-metropolitan-police-logoஇலண்டன் – நேற்று சனிக்கிழமை காலையில் துறைமுகப் பகுதியான டோவர் வட்டாரத்தில் இலண்டன் பார்சன்ஸ் இரயில் நிலையத் தாக்குதல் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவனைக் கைது செய்திருக்கும் இலண்டன் மெட்ரோபோலிடன் காவல் துறை தொடர்ந்து பல கட்டடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

டோவர் இலண்டனிலிருந்து தென்கிழக்கே 80 மைல் தொலைவில் அமைந்திருக்கும் நகராகும். இங்கிருந்துதான் அண்டை நாடான பிரான்சுக்கு பெர்ரி எனப்படும் பயணப் படகு சேவைகள் நடத்தப்படுகின்றன.

இதற்கிடையில் இலண்டன் முழுவதும்  அபாய நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இலண்டன் மாநகரசபைத் தலைவர் (மேயர்) சாதிக் கானும், காவல் துறையும் அறிவிப்புகளை வெளியிட்டனர். இலண்டன் பகுதிகளில் சில கட்டடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

வெள்ளிக்கிழமை பார்சன்ஸ் இரயில் நிலையத்தில் இரயில் வண்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 22 பேர் காயமடைந்தனர். எனினும் மரணங்கள் எதுவும் நிகழவில்லை.

18 வயது இளைஞனின் கைது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் மிக முக்கிய மேம்பாடு என்றும் இதைத் தொடர்ந்து விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்த காவல் துறையினர், கைது செய்யப்பட்டவனின் விவரங்களைப் பாதுகாப்பு கருதி வெளியிட மறுத்து விட்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் சம்பவத்திற்குப் பொறுப்பு எனக் கூறியிருந்தாலும் அதற்கான ஆதாரங்களை இதுவரை வெளியிடவில்லை.