கோலாலம்பூர் – வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கான நிதியைத் தடுக்கும் விதமாக உலக நாடுகளின் முயற்சிக்கு மலேசியாவும் உதவி செய்திருக்கிறது.
வடகொரியாவில் இருந்து வரும் இறக்குமதிப் பொருட்கள் அனைத்திற்கும் மலேசியா தடை விதித்திருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 20.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு வடகொரியாவில் இருந்து இறக்குமதிப் பொருட்களை வாங்கிய மலேசியா, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்கங்களில் எந்த ஒரு இறக்குமதிப் பொருளையும் வாங்கவில்லை என தரவறிக்கை கூறுகின்றது.
கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம் படுகொலை செய்யப்பட்டதையடுத்து மலேசியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.