கோலாலம்பூர் – இந்த வார இறுதியில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இலங்கையைப் பார்வையிடவிருப்பதால், இலங்கைக்கான மலேசியத் தூதர் வான் ஜைடி வான் அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
பிரதமரின் பயணம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக புத்ராஜெயாவில் இருந்து “அனுபவம்” வாய்ந்த உயர் அதிகாரி தற்காலிகமாக நியமனம் செய்பட்டிருப்பதாகவும் விஸ்மா புத்ரா கூறியிருக்கிறது.
வரும் 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், நடைபெறவிருக்கும் பொதுநலவாய (காமன்வெல்த்) தலைவர்களின் அரசாங்கக் கூட்டத்தை மலேசியா ஒருங்கிணைக்கிறது. அதனை ஒருங்கிணைக்கும் பொறுப்பைத் தற்போது வான் ஜைடிக்கு அளித்திருப்பதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்திருக்கிறது.
இலங்கைக்குப் பிறகு, மாலத்தீவுக்கு பிரதமர் நஜிப் செல்கிறார்.