Home நாடு மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது

மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது

2105
0
SHARE
Ad
vibulanantha-doc-movie-release-27122017 (7)
விபுலானந்தா அடிகளாரின் ஆவணப்பட வெளியீட்டு விழாவில், ம. மன்னர் மன்னன், முனைவர் க.திலகவதி, தவத்திரு பாலயோகி சுவாமிகள், டான்ஸ்ரீ குமரன், முரசு நெடுமாறன், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் மு.இளங்கோவன்

கோலாலம்பூர் –  பிரபல இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை 26 டிசம்பர் 2017-ஆம் நாள் மாலையில் சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

vibulanantha-doc-movie-release-27122017 (6)மலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

ம. மன்னர் மன்னன் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ குமரன் ஆவணப்படத்தின் சிறப்பினைக் குறித்து உரையாற்றினார்.

vibulanantha-doc-movie-release-27122017 (5)
டான்ஸ்ரீ க.குமரன்
#TamilSchoolmychoice

மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப் படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.

vibulanantha-doc-movie-release-27122017 (3)
தவத்திரு பாலயோகி சுவாமிகள்
vibulanantha-doc-movie-release-27122017 (4)
முனைவர் க.திலகவதி

இந்தியாவில் விபுலாநந்தா அடிகளார் குறித்த ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

muelangovan@gmail.com
0091 9442029053