Home வணிகம்/தொழில் நுட்பம் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்

ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்

1093
0
SHARE
Ad

சான் ஓசே – திங்கட்கிழமை ஜூன் 4-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் நடைபெறும் அனைத்துலக ஆப்பிள் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறன் (படம்)கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 1) அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

ஆப்பிள் நிறுவனத்தின் பதிவு பெற்ற அதிகாரத்துவ தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களில் ஒருவரான முத்து நெடுமாறன் 2002 முதற்கொண்டு கடந்த 16 ஆண்டுகளாக தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் கலந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

முத்து நெடுமாறன் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் உருவாக்குநர் என்பதோடு, செல்லினம், செல்லியல் இணையத் தளங்களின் நிறுவனரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்.

உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்கள் குவியும் மாநாடாகவும், அனைத்துல தொழில் நுட்ப ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் முக்கியக் களமாகவும் ஆப்பிள் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்கள் மாநாடு திகழ்கிறது.